சிலப்பதிகாரம் சிலம்பு- அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது. சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று. இந்நூல் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று.இந்நூல் 'பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்' எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றனையும் காணலாம். கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர். ஏனைய நூல்கள் அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்க சிலப்பதிகாரம் கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதால் இதனை 'குடிமக்கள் காப்பியம்' என்றும் கூறுவர். இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப்பட்ட இந்நூலை இயற்றியவர் இளங்கோ அடிகள் என்பவராவார். இவர் புகழ் பெற்ற சேரமன்னன் செங்குட்டுவனுடைய தம்பி எனக் கருதப்படுகின்றது. காலம் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள். நற்றிணைப் பாடல் கண்ணகி வரலாற்றைக் குறிப்பிடுகிறது. மலையாள மொழி கி.பி. ஆறாம் நூற்றாண்டில் தோன்றியது. மணிமேகலை வஞ்சி மூதூர் சென்று பல்வேறு சமயங்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தது மலையாளத்தில் அன்று. தமிழில். எனவே மணிமேகலை...
முதியாள் திருந்து அடி மும்மையின் வணங்கி மது மலர்த் தாரோன் வஞ்சினம் கூற 'ஏடு அவிழ் தாரோய்! எம் கோமகள் முன் நாடாது துணிந்து நா நல்கூர்ந்தனை' என வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச் சித்திரம் ஒன்று தெய்வம் கூறலும் உதயகுமரன் உள்ளம் கலங்கி பொதி அறைப் பட்டோர் போன்று மெய் வருந்தி "அங்கு அவள் தன் திறம் அயர்ப்பாய்" என்றே செங்கோல் காட்டிய தெய்வமும் திப்பியம் பை அரவு அல்குல் பலர் பசி களையக் கையில் ஏந்திய பாத்திரம் திப்பியம் "முத்தை முதல்வி அடி பிழைத்தாய்" எனச் சித்திரம் உரைத்த இதூஉம் திப்பியம் இந் நிலை எல்லாம் இளங்கொடி செய்தியின் பின் அறிவாம்' எனப் பெயர்வோன் தன்னை அகல் வாய் ஞாலம் ஆர் இருள் உண்ண பகல் அரசு ஓட்டி பணை எழுந்து ஆர்ப்ப மாலை நெற்றி வான் பிறைக் கோட்டு நீல யானை மேலோர் இன்றிக் காமர் செங் கை நீட்டி வண்டு படு பூ நாறு கடாஅம் செருக்கி கால் கிளர்ந்து நிறை அழி தோற்றமொடு தொடர முறைமையின் நகர நம்பியர் வளையோர் தம்முடன் மகர வீணையின் கிளை நரம்பு வடித்த இளி புணர் இன் சீர் எஃகு உளம் கிழிப்பப் பொறாஅ நெஞ்சில் புகை எரி பொத்தி பறாஅக் குருகின் உயிர்த...