அறன் வலியுறுத்தல் (குறள் 31 - 40)

குறள் - 31:
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

குறள் - 32:
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

குறள் - 33:
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

குறள் - 34:
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.

குறள் - 35:
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

குறள் - 36:
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

குறள் - 37:
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

குறள் - 38:
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.

குறள் - 39:
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.

குறள் - 40:
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.

Popular posts from this blog

பங்காரு அடிகளார் 108 போற்றி மந்திரம்

நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்

சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை