குண்டலகேசி பாடிய பாடல்கள்

அறுசீர் ஆசிரிய விருத்தம்
வெட்டிய கேசத் தோடும் விளங்குசேற்று உடிலனோடும்
முட்டரும் அரையின் மீது முடையுடைக் கந்தை தன்னை
இட்டமாய்த் திரிந்தேன் முன்னாள் இனியதை இன்னா என்றும்
மட்டரும் இன்னா உள்ள பொருளையும் இனுதஎன்றேனே.

நண்பகல் உறங்கும் சாலை நடுநின்றே வெளியே போந்தேன்
தன்புனல் கழுகுக் குன்றம் தனையடைந்து அலைந்த போது
நன்புடை அறவோர் கூட்டம் நடுவணே மாசில் தூயோன்
பண்புடைப் புத்தன் தன்னைப் பாவியேன் கண்டேன் கண்ணால்.

அண்ணலை நேரே கண்டேன் அவன்முனே முழந்தாள் இட்டு
மண்ணதில் வீழ்ந்து நைந்து வணங்கினேன் வணங்கி நிற்கத்
தண்ணவன் என்னை நோக்கித் தகவொரு பத்தா இங்கே
நண்ணுதி என்றே சாற்றி நாடரும் துறவை ஈந்தான்.

அலைந்துமே அங்கநாட்டோடு அண்டுமா மகத நாடு
மலைந்த பேர் வச்சி யோடு மன்னுகோ சலமும் காசி
நலந்தரு நாடு தோறும் நாடினேன் பிச்சைக் காக
உலைந்த இவ் ஐம்ப தாண்டில் எவர்க்குமே கடன்பட்டில்லேன்.

துறவியேன் பத்தா கட்டச் சீவரம் கொடுக்கும் மாந்தர்
முறையுடை மணத்தராகி நீள்புவி வாழ்ந்து நாளும்
குறைவில்நல் வினைகள் ஈட்டிக் கோதின் மெய் அறிவர் ஆகி
முறைமையாய் மலங்கள் நீங்கி முத்தியை அடைவார் திண்ணம்.

Comments

Popular posts from this blog

பங்காரு அடிகளார் 108 போற்றி மந்திரம்

நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்

கட்டியங்காரன் சூழ்ச்சியை அறிந்த சச்சந்தன் வீராவேசம் கொள்ளுதல்